படமாகிறது சாய்பாபா வரலாறு
4/30/2011 10:56:27 AM
4/30/2011 10:56:27 AM
ஐதராபாத்: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டவர் சத்ய சாய்பாபா. இவர், கடந்த 24ம் தேதி புட்டபர்த்தியில் மறைந்தார். சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பாபா, பிரசாந்தி நிலையம் என்ற ஆசிரமம் நடத்தினார். ஆன்மிகத்துடன் சமூக சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கினார். பின்தங்கிய கிராமமாக இருந்த புட்டபர்த்தி உலகத்தினரின் கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாக இருந்தது பாபாவின் ஆன்மிகப்பணி. இதை மையமாக வைத்து அவரது வாழ்க்கை வரலாறை சிசி மோஷன் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் நிறுவனம் படமாகத் தயாரிக்கிறது. 'இதில் நடிப்பவர்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேச்சு நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment