4/29/2011 5:02:37 PM
உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆபத்து எதுவும் இல்லை என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது.
நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சில காட்சிகளில் நடித்தார். படப்பிடிப்பின்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.
Post a Comment