4/26/2011 10:59:11 AM
சிம்பு நடித்திருக்க வேண்டிய படம் 'கோ'. ஆனால் சில காரணங்களால் கோ-விலிருந்து விலகினார் சிம்பு. சிம்புக்கு பதில் ஜீவாவை ஒப்பந்தம் செய்தார் கே.வி.ஆனந்த். இந்த மாற்றம் பலரது மனதில் கேள்வியை விதைத்தது. சிம்பு இடத்தில் ஜீவாவா? இந்த கேள்விக்கு அடித்து பதில் சொல்லியிருக்கிறார் ஜீவா. கே.வி.ஆனந்தின் கோ ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. படத்தின் ரிசல்ட் நன்றாக இருக்கவே தனது மனதை அகலத் திறந்திருக்கிறார் ஆனந்த். ஆனந்தை பாராட்டும் எல்லோரும் ஜீவாவையும் பாராட்டுகிறார்கள். ஜீவா ஒரு நல்ல ஸ்டைலிஷான நடிகர். ராம், கற்றது தமிழ், ஈ, சிவா மனசுல சக்தி படங்களில் அவரோட நடிப்பு எனக்குப் பிடிக்கும். கோ பட கேரக்டருக்கு அப்படியே ஆப்டாகப் பொருந்தியிருக்கிறார் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் கே.வி.ஆனந்த். படத்தை மிஸ் பண்ண சிம்புக்கு தற்போது படத்தின் வருத்தத்தை தந்திருக்கிறதாம். படத்தின் தான் நடித்திருந்தால் தன்னுடைய கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என தற்போது சிம்பு புலம்பி வருவதாக செய்திகள் வருகின்றன.
Post a Comment