அனுஷ்காவுடன் அமலா பால் மோதலா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அனுஷ்காவுடன் அமலா பால் மோதலா?

4/19/2011 4:01:20 PM

நடிகை அமலா பால் கூறியது: தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும், நானும் இணைந்துள்ளோம். எங்கள் இருவருக்கும் மோதல் வரும் என்று பலர் ஜோதிடம் கூறினார்கள். அதெல்லாம் பொய்யாகிவிட்டது. மாறாக இருவரும் நெருங்கிய தோழிகளாக விட்டோம். செட்டுக்கு வந்ததுமே சக நட்சத்திரங்களுடன் நட்புடன் பழக தொடங்கிவிடுவார் அனுஷ்கா.

அவருடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். ஹீரோ விக்ரமின் டெடிகேஷன் என்னை கண்கலங்க வைத்துவிட்டது. ஒரு காட்சியில் விக்ரமின் நடிப்பை பார்த்து கண் கலங்கினேன். அது எமோஷனல் காட்சி. அவர் வசனத்தை பேசி முடித்தபோது என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இந்த படத்தில் நடித்த பிறகு  மாற்றுத்திறனாளிகளுக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.





Source: Dinakaran
 

Post a Comment