அஞ்சலியிடம் கிளாமருக்கு இடமில்லை!

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அஞ்சலியிடம் கிளாமருக்கு இடமில்லை!

4/30/2011 1:50:27 PM

'கிளாமராக எப்போதும் நடிக்க மாட்டேன்' என்று அஞ்சலி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்கிறேன். நிறைய படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை வசந்தபாலனின் 'அங்காடி தெரு'தான் எனது அடையாளமாக இருக்கிறது. அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாது. 'இந்த கேரக்டரில் செயற்கையாக நடிக்கக் கூடாது. கதாபாத்திரத்துக்கு ஏற்ப இயற்கையான பாவனைகள் செய்தால் போதும். அப்போதுதான் அந்த வேடத்தோடு ரசிகர்களால் ஒன்ற முடியும்' என்று இயக்குனர் வசந்தபாலன் கூறினார். அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று படம் ரிலீஸ் ஆன பிறகு தெரிந்துகொண்டேன். மீண்டும் அவர் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். விரைவில் அதற்கான வாய்ப்பு அமையும். ஒரு படத்தில், நான் கிளாமராக நடித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. என்னிடம் கிளாமருக்கு இடம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள்தான் என்னை தேடி வருகிறது. அதைத்தான் நானும் விரும்புகிறேன்.

 

Post a Comment