4/25/2011 12:27:38 PM
'காதல்' படம் மூலம் அறிமுகமானவர் சரண்யா. 'பேராண்மை', 'விளையாட்டு' படங்களில் நடித்தார். தற்போது 'மழைக்காலம்' உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவரை 'காதல்' சரண்யா என்று அழைக்கிறார்கள். அப்படி அழைக்க வேண்டாம் என்கிறார் சரண்யா. இதுகுறித்து அவர் கூறியதாவது: 10ம் வகுப்பு படிக்கும்போது 'காதல்' படத்தில் நடித்தேன். இப்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டேன். இப்போதும் என்னை 'காதல்' சரண்யா என்று அழைக்கிறார்கள். இதை சிலர் கிண்டலாக குறிப்பிடுவதால் பெயரில் மாற்றம் செய்திருக்கிறேன். எங்கள் குடும்ப பெயரான நாக் என்பதை இணைத்து எனது பெயரை சரண்யா நாக் என்று மாற்றி இருக்கிறேன். 'மழைக்காலம்' படத்தில் ஓவிய கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். நான் ஓவியம் வரைவது மாதிரி நிறைய காட்சிகள் இருப்பதாக இயக்குனர் சொன்னதால் நிஜமாகவே ஓவிய ஆசிரியை ஒருவரிடம் ஓவியம் கற்றேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில், வந்த படங்களில் எல்லாம் ஒப்புக் கொண்டேன். அவற்றில் பல பாதியிலேயே நின்று விட்டது. அதனால் இப்போது படம் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்தாலும் நல்ல இயக்குனர் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.
Post a Comment