4/15/2011 12:21:58 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
உலக ஹீரோ நடிப்புல செல்வராகவரு இயக்குற படத்துக்கு யுவ மியூசிக்கைத்தான் பேச¤னாங்களாம்... பேச¤னாங்களாம்... திடீர்னு சங்கர மகாதான் படத்துக்கு இசை அமைக்கிறாருன்னு அறிவிப்பு வந்துருச்சாம்... வந்துருச்சாம்... இந்த மாற்றத்துக்கு காரணம் உலக ஹீரோவாம்... ஹீரோவாம்...
பிரசன்ன ஹீரோவுக்கு பிரேக் கிடைக்காததால வில்லன் வேஷம் கூட போட்டுப் பார்த்தாரு. பயனில்லாம போச்சு. வருத்தத்துல தனிமை விரும்பியா நடிகரு மாறிப்போனாரு. இப்படியே முடங்கி கிடந்தா இண்டஸ்ட்ரி கூட டச் விட்டுப் போயிடும்னு பிரண்ட்ஸுங்க அட்வைஸ் பண்ணினாங்களாம். அதனால யூத் ஹீரோங்க நடத்துற நைட் பார்ட்டில தவறாம கலந்துக்கிறாராம்... கலந்துக்கிறாராம்...
நாடோடி நடிகை கடைசியா நடிச்ச படம் கைகொடுக்கல. பரிகாரம் செஞ்சா அதிர்ஷ்டம் கதவை தட்டும்ன்னு சாமியார் ஒருத்தர் சொன்னதை கேட்டு குருவாயூர் கோயிலுக்கு போனாராம். மறுபடியும் கோலிவுட்ல ஹிட்டான தன்னோட எடைக்கு எடை பழம் கொடுக்க¤றதா வேண்டிக்கிட்டாராம்... நடிகை வேண்டிக்கிட்டாராம்...
Post a Comment