4/29/2011 12:54:59 PM
தமிழிலும் சரி தெலுங்கிலும் சரி ப்ரியாமணிக்கு சரியான வாய்ப்புகளில்லை. அதிலும் தமிழ் பட வாய்ப்புகள் ப்ரியாமணிக்கு சுத்தமாக கிடைக்கவில்லை. தமிழ் முன்னணி ஹீரோக்கள் எல்லாம், தமன்னா, அமலா பால், அனுஷ்கா, சமீரா ரெட்டி போன்றவர்களை மட்டும் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜுனியர் என்டிஆரின் படத்தில் ப்ரியாமணிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஏறக்குறைய ஜாக்பாட். ஜுனியர் என்டிஆரின் அடுத்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என அனைவரும் கூறி வந்தனர். திடீரென ஸ்ருதியின் இடத்தில் நுழைந்திருக்கிறார் ப்ரியாமணி. இதற்குமுன் இவர்கள் இணைந்து நடித்த யமதொங்கா சுமாரான வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment