4/18/2011 12:01:13 PM
ஆர்யா, விஷால் நடித்துள்ள, 'அவன் இவன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு முன்பே இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், மது ஷாலினி, ஆர்.கே நடித்துள்ள படம் 'அவன் இவன்'. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். இதன் பாடல் வெளியீடு இன்று மாலை நடக்கிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பே இன்டர்நெட்டில் பாடல்கள் வெளியாகிவிட்டது. இதுபற்றி யுவன் சங்கர் ராஜா கூறும்போது, 'இதன் பாடல் உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டுக்கு அந்நிறுவனம் சி.டி.களை அனுப்பியுள்ளது. அங்கிருந்து பாடல்கள் வெளியாகியிருக்கலாம். இதை கேள்விபட்டு அப்செட்டாகிவிட்டேன். இந்த மாதிரிவெளியிடுவதற்கு முன்பே இணையத்தில் பாடல்கள் லீக் ஆகியிருப்பது கண்டிக்கத்தக்கது' என்றார்.
Post a Comment