4/20/2011 2:57:17 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
கோலிவுட் ஹீரோயின்கள் ஷூட்டிங்கிற்கு வரும்போது டாடி, மம்மி, பிரெண்ட்சுனு யாரையாவது ஒருவரை கையோடு கூட்டி வர்றாங்களாம். அனுஷ்கமான நடிகை அதற்கு தடை போட்டிருக்க¤றாராம். டாடியோ, மம்மியோ தன்னோட ஷூட்டிங் செட் பக்கம் தலை காட்டக்கூடாதுனு சொல்றாராம். காதலனுக்கும் இதே போல் தடா போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்...
காவ்யமான நடிகை சமீபத்துல சக நடிகருக்கு ஆதரவா கேரளால பிரசாரம் செய்யப் போனாரு. மற்ற கட்சிக்காரங்க கறுப்பு கொடி காட்டி, திரும்பிப் போன்னு நடிகையை பயமுறுத்திட்டாங்களாம். இதனால அரசியல் பக்கமே வரமாட்டேன்னு நடிகை எஸ் ஆகுறாராம்... ஆகுறாராம்...
அம்பி நடிகை கூந்தலை வெட்டி கிராப் கட் வச்சிருக்காராம்... வச்சிருக்காராம்... அப்பப்போ ஹேர் ஸ்டைல், லுக்கை மாத்துறாராம். அப்போதான் இந்த வயசுலேயும் நடிக்க வாய்ப்பு வரும்னு சக நடிகைகள்கிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...
Post a Comment