ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

|

Tags: avm, magnum opus, pooja


Rana
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராணா பூஜை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடக்கவிருந்தது. ஆனால் தயாரிப்பு வேலைகள், ஸ்கிரிப்ட் பணிகள் மற்றும் தீபிகாவுக்கான தோற்ற வடிவமைப்பு குறித்த ஆலோசனைகள் நீண்டதால் ஒரு வாரம் தள்ளிப் போனதை முன்பே தெரிவித்திருந்தோம்.

இப்போது, அறிவித்தபடி ராணா படப்பிடிப்பு பூஜையுடன் நாளை ஏவிம்மில் அமர்க்களமாக ஆரம்பமாகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியாகியுள்ளது.

அனாவசிய வதந்திகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அவ்வப்போது மீடியாவுக்குத் தெரிவிக்க முடிவு செய்துள்ள ரஜினி, மிகுந்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் பூஜை நடக்கிறது.

பின்னர், ஏவிஎம்மில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடர்கிறது. வெளிநாடுகளில், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத அழகிய இடங்களில் இந்தப் பாடல்கள் படமாக்கப்படுகின்றன.

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்கத்துக்கு ராஜீவன் பொறுப்பேற்றுள்ளார். இயக்கம் கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: ஈராஸ் இன்டர்நேஷனல் கிஷோர் லுல்லா – ஆக்கர் ஸ்டுடியோஸ் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த்.

தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக வெளியாகும் இருமொழிப் படம் இது!

English summary
Superstar Rajini bilingual magnum opus Rana shooting will be launched tomorrow at AVM with formal pooja.
 

Post a Comment