4/30/2011 10:55:18 AM
ஜீவாவுடன் 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்து வரும் டாப்ஸி கூறியதாவது: 'ஆடுகளம்' படத்துக்குப் பிறகு என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கண்ணன் இயக்கும் 'வந்தான் வென்றான்' படம் எனக்கு வேறொரு அடையாளத்தை கொடுக்கும். நான் அதிக சம்பளம் கேட்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. என் தகுதிக்கு என்ன தேவையோ அதைதான் கேட்கிறேன். தெலுங்கில் நான் நடித்துள்ள 'மிஸ்டர் பெர்பக்ட்' சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. பிரபாஸ், காஜலுடன் என் நடிப்பும் இதில் பேசப்படுகிறது. இந்தப் படத்துக்கு நானே டப்பிங் பேசியுள்ளேன். இதே போல தமிழிலும் பின்னணி பேச ஆசை இருக்கிறது. அதற்காக தமிழ் கற்று வருகிறேன். இப்போது யாராவது பேசினால் புரிந்துகொள்ள முடிகிறது. விரைவில் தமிழில் பேசுவேன். தெலுங்கில் ரவிதேஜாவுடன் 'வீரா' படத்தில் இப்போது நடித்துவருகிறேன். தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.
Post a Comment