4/15/2011 4:04:05 PM
டாப்ஸி கூறியது: 'ஆடுகளம்' நல்ல பெயரை வாங்கித் தந்தது. 'யாத்தே... யாத்தே' பாடல் எனக்காகவே எழுதப்பட்ட பாடலாக அமைந்தது. 'வெள்ளாவி வச்சிதான் வெளுத்தாங்களா, வெயிலுக்குத் தெரியாம வளத்தாங்களா?' வரிகள் ஹைலைட்டா அமைந்தது. அடுத்து 'வந்தான் வென்றான்' படத்தில் நடிக்கிறேன். அதேபோல் கிருஷ்ணவம்சி இயக்கும் தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். இதற்கிடையில் இந்தியில் டேவிட் தவான் படத்தில் நடித்து முடித்தேன். 1981ம் ஆண்டு வெளியான 'சாஸ்மி புத்தூர்' ரொமான்டிக் படத்தின் ரீமேக்தான் இது. மலையாளத்தில் 'டபுள்ஸ்' படத்தில் மம்மூட்டியுடன் நடித்திருக்கிறேன். இதுவரை எனக்கு கிடைத்த வேடங்கள் எதுவும் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவில்லை. நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரங்களாகவே அமைந்துள்ளன. நிறைய வாய்ப்புகள் வந்தாலும் மனதை கவரும் வேடங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் அது கமர்சியல் ஹிட்டாக அமைவதில் கவனமாக இருப்பேன்.
Post a Comment