தேசிய விருது அறிவிப்பு : ஆடுகளத்து படத்துக்கு 2 விருது, சிறந்த நடிகர் விருது : தனுஷ்!
5/19/2011 4:03:17 PM
5/19/2011 4:03:17 PM
புதுடெல்லி : சன்பிக்சர்சின் ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு 2 தேசியவிருது வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிமாறனுக்கு தங்கத்தாமரை விருது வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது ஆடுகளம் படத்தின் நாயகன் தனுஷிற்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகைக்கான விருது சரண்யா பொன்வண்ணனுக்கு வழங்கப்படுகிறது. "தென்மேற்கு பருவக்காற்று" படத்தில் நடித்ததற்காக சரண்யாவிற்கு விருது வழங்கப்படுகிறது. மலையாளப்படமான 'ஆதாமின்டே மகன் அபு' படத்திற்கு தங்கத்தாமரை விருது வழங்கப்பட்டுள்ளது. சல்மான்கான் நடித்த தபாங் திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதை பெற்றுள்ளது.
Post a Comment