'3 சீட்டு' விளையாடிய நடிகர் ரவிதேஜாவின் தந்தை கைது!

|

Tags:


ஹைதராபாத்: சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக நடிகர் ரவிதேஜாவின் தந்தை பூபதி ராஜு உள்ளிட்ட 46 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத் நகரின் ரானிகஞ்ச் பகுதியில் கோல்டன் பார்க் ஹோட்டலில் இந்தக் கைது நடந்தது.

இதுகுறித்து மஹன்காளி போலீசார் கூறுகையில், "கோல்டன் பார்க் ஹோட்டலில் சூதாட்டம் நடத்த முன்னாக அனுமதி பெறப்பட்டிருந்தது. எனினும் அங்கு சூதாட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. ஆனாலும் சூதாட்டம் நடத்த ஹோட்டல் நிர்வாகம் அனுமதித்துள்ளது. நாங்கள் நடத்திய சோதனையில் பூபதி ராஜு உள்ளிட்ட 46 பேர் கைது செய்யப்பட்டனர்", என்றனர்.

கைதி செய்யப்பட்ட அனைவர் மீதும் ஆந்திரப் பிரதேச விளையாட்டு சட்டத்தின்கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். முன்னதாக அவர்களிடமிருந்து ரூ 38 ஆயிரம் ரொக்கம் மற்றும் 46 செல்போன்களை பறிமுதல் செய்தனர் போலீசார்.
 

Post a Comment