5/20/2011 11:38:05 AM
தேசிய விருதை 6முறையாக, கவிஞர் வைரமுத்து வாங்குகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக தேசிய விருது பெற்றிருந்தார். அவர் கூறியது: பொதுவாக நான் பாட்டு எழுதிய பிறகுதான் படம் எடுப்பார்கள். ஆனால், 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் தற்போது தேசிய விருது கிடைத்திருக்கும் 'கள்ளிக்காட்டில் பொறந்த தாயே' பாடல் படம் எடுத்த பிறகு எழுதிய பாடல். இதுவரை நடுத்தர மற்றும் மேட்டுக்குடி தாய்களை பற்றிய பாடல்களே திரைப்படத்தில் வந்திருக்கிறது. முதன் முறையாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, புழுதி மண்ணை சேர்ந்த ஒரு தாயின் பாடலாக இது எழுதப்பட்டது. தான் படிக்காமல் உழைத்து தன் பிள்ளைகளை படிக்க வைத்த, படிக்க வைத்துக் கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்.
Post a Comment