5/17/2011 4:33:34 PM
போர்ச்சுகல் தொழில் அதிபரை காதலித்து வருகிறார் திவ்யா. 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' உட்பட பல படங்களில் நடித்தவர் திவ்யா. சமீபத்தில் காங்கிரசில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை கொல்கத்தா – பெங்களூர் அணிகள் மோதிய சிறப்பு கிரிக்கெட் போட்டி நடந்தது. இதை பார்க்க திவ்யா தனது வெளிநாட்டு காதலர் ரபேலுடன் வந்து அனைவரது பார்வையையும் ஈர்த்தார். ரபேல், போர்ச்சுகல் நாட்டில் தொழில் செய்து வருகிறார். இவரது பெற்றோர் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். கடந்த புதுவருடப்பிறப்பின் போது நடந்த பார்ட்டி ஒன்றில் முதன் முதலாக திவ்யாவும் ரபேலும் சந்தித்துள்ளனர். அப்போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு ரபேலின் பெற்றோர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி திவ்யாவிடம் கேட்டபோது, 'கடந்த 5 மாதமாகத்தான் நாங்கள் காதலித்து வருகிறோம். இன்னும் ஒன்றரை வருடத்துக்கு திருமணம் பற்றி எண்ணமில்லை. இதுதொடர்பாக நாங்கள் இருவரும் கூட பேசிக்கொள்ளவில்லை. என்னைப் பார்க்கத்தான் ரபேல் வெளிநாட்டில் இருந்து வந்ததாகச் சொல்வது பொய். பிசினஸ் விஷயமாக கடந்த சில வாரங்களாக அவர் டெல்லியில் இருக்கிறார். இதுதொடர்பாக வேறு எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை' என்றார்.
Post a Comment