சென்னை: பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தவும், இடம் மாறி சிகிச்சை பெற்றால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல சிறுநீரக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். இதற்காக இன்று இரவு ரஜினியை அழைத்துக் கொண்டு அவர்கள் சிங்கப்பூர் செல்கின்றனர்.
ஆரம்பத்தில் லண்டனுக்கு சென்று ரஜினிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவ்வளவு தூரம் போவதற்குப் பதில் அருகாமையில் இருக்கும் சிங்கப்பூரிலேயே அதி நவீன வசதிகள் நிறைய கிடைப்பதால் அங்கு செல்லலாம் என தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஜினியின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு இருக்கிறார். கடந்த நான்கு நாட்களாக அவர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். கட்டுப்பாட்டுடன் கூடிய சாப்பாட்டை சாப்பிட்டபடி, டிவி பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.
Read: In English
Post a Comment