அடுத்த வாரம் மங்காத்தாவிலிருந்து ஒரு பாட்டு வெளியீடு

|

Tags: ajith kumar, audience, birthday, film, song, trailer


Ajith and Lakshmi Rai
அஜீத் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் அவரது 50வது படமான மங்காத்தா ஜூனில் திரைகளைத் தொடவுள்ளது. இந்த நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள விளையாடு மங்காத்தா என்ற பாடல் பெரும் ஹிட்டாகியுள்ளது.

இத்தனைக்கும் இந்தப் பாடலின் சில வரிகள் மட்டுமே மே 1ம் தேதி அஜீத் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டுள்ள படத்தின் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அதுவே ஹிட் ஆகி விட்டதால் அடுத்த வாரம் இந்தப் பாடலை முழுமையாகவே வெளியிடப் போகிறார்களாம்.

43 நிமிடம் ஓடும் இந்த டிரெய்லர் அஜீத் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் படம் சூப்பர் ஹிட் என்று தயாரிப்புத் தரப்பும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இப்போதே உற்சாகமாகி விட்டனராம்.

படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவும் தனது பாடல்களுக்குக் கிடைக்கப் போகும் வரவேற்பு குறித்து பெருமையுடன் உள்ளாராம்.

மே 1ம் தேதியே படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் இது தள்ளிப் போய் விட்டது. சோனி மியூசிக் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ விழாவை விமரிசையாக நடத்த சோனி மியூசிக் விரும்புவதால் மே 3வது வாரத்திற்குப் பாடல் வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

மங்காத்தா படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரேம்ஜி அமரன், வைபவ் ரெட்டி, லட்சுமி ராய், ஆன்ட்ரியா, சோனா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

English summary
Mangatha’s first promotional video which was released on Ajith Kumar’s birthday, has received a huge response from his fans. The 43-second trailer, which also features ‘vilayaadu mangatha…’ song, has attracted the audience. Hence, the makers of the film have decided to release the full track by next week. Sources say that the makers of the film are happy after ‘vilayaadu mangatha…’ song was widely appreciated by the audience.
 

Post a Comment