5/6/2011 2:52:51 PM
நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்தார் மனிஷா கொய்ராலா. இப்போது மீண்டும் இந்தி படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. நடிகை தீப்தி நாவல் இயக்கும் ‘தோ பைசே கி தூஹ்ப் சாரனா கி பாரீஷ்’ படத்தில் மனிஷா கொய்ராலா நடிக்கிறார். கதைப்படி அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம். இது பற்றி மனிஷா கூறும்போது, “இதற்கு முன் இது போன்ற வேடத்தில் நடித்ததில்லை. வாழ்க்கையில் போராட்டத்தை மட்டுமே பார்க்கும் ஒரு பெண்ணின் கதை. பட இயக்குனரான தீப்தியும் சிறந்த நடிகை. நான் அறிமுகமான ‘சவுதாகர்’ இந்தி படத்தில் எனக்கு மாமியாராக அவர் நடித்திருந்தார். இப்படத்துக்காக அவர் என்னை தேர்வு செய்தது சந்தோஷமாக உள்ளது. தீப்தியின் இயக்கத்தில் நடிப்பது எனக்கு சுலபமான விஷயமாக இருக்கும்” என்றார்.
Post a Comment