5/10/2011 2:12:58 PM
ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இதற்கிடையில் கடந்த 4ந் தேதி மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் சிகிச்சை அளித்தார்கள்.
காய்ச்சலும், இருமலும் இருப்பதாக கூறப்பட்டது. மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றனர். ஆனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று 7வது நாளாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார். தினமும் அதிகாலையில் எழுந்து மருத்துவமனைக்கு உள்ளேயே ரஜினி நடைபயிற்சி செய்கிறார். மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
Post a Comment