5/19/2011 3:40:30 PM
1993ல் மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ், மலையாளத்தில் படமாகிறது. இப்படத்தை மலையாள கதாசிரியர் பாபு ஜனார்த்தனன் இயக்குகிறார். படத்துக்கு Ô1993 பம்பாய் மார்ச் 12Õ என பெயரிட்டுள்ளனர். மம்மூட்டி ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ரோமா ஹீரோயினாக நடிக்கிறார். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது நடந்த நிஜ சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இப்படக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி இயக்குனர் பாபு ஜனார்த்தனன் கூறும்போது, ÔÔமும்பையை சேர்ந்த சனதான பட் என்பவரும் கேரளாவை சேர்ந்த ஆபிதா என்ற பெண்ணும் மும்பையில் சந்திக்கிறார்கள். அப்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து, அவர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறியது என்பதே கதை. இது நிஜமாக நடந்தது. அந்த மும்பைவாசி வேடத்தில் மம்மூட்டியும் கேரள பெண்ணாக ரோமாவும் நடிக்க உள்ளனர்ÕÕ என்றார்.
Post a Comment