சினிமா தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து களைய தனி செயலர் ஒருவரை அரசு நியமிக்கவிருப்பதாக முன்னணி தயாரிப்பாளர்களிடம் அதிமுக பொதுச் செயலரும் முதல்வராகப் பொறுப்பேற்கவிருப்பவருமான ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள் 15 பேர் இன்று ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதா கேட்டறிந்தார்.
பின்னர், இனி திரைப்பட தொழில் பிரச்சினைகளின்றி நடக்க புதிய அரசு உதவும் என்றும், திரையுலக வர்த்தகத்தில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து களைய புதிதாக ஒரு தனி செயலர் அமைக்கப்படுவார் என்றும் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
திருட்டு விசிடி பிரச்சினை குறித்தும் அவரிடம் தயாரிப்பாளர்கள் முறையிட்டுள்ளனர். மேலும் திரையரங்குகளை குறிப்பிட்ட சிலர் கட்டுப்படுத்தி வைப்பதையும் தடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இவற்றை உடனடியாகக் கவனிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment