இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம்

|

Tags:


சென்னை: கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இனி வரும் நாட்களில் கடும் வெப்பம் இருக்காது, சற்று குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெயில் மிகக் கடுமையாக இருந்தது.

இந்த கத்திரி பருவக்காலத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக திருத்தணியில்தான் 111 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது. ஆரம்பத்தில் சென்னையில்தான் வெயில் மண்டையைப் பிளந்தது. பின்னர் அது வேலூருக்கு ஷிப்ட் ஆகி விட்டது.

தற்போது தென் மேற்குப் பருவ மழை கேரளாவிலும், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களிலும் தொடங்கவுள்ளதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவும் சூழல் அதிகரித்துள்ளது.
 

Post a Comment