5/28/2011 12:42:53 PM
இரண்டு முன்னணி ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடிக்கும்போது போட்டி என்பது சகஜம். சில நேரம் அது மோதலாக மாறி விடுகிறது. இந்தியில் அனுராக் பாசு இயக்கும் 'பார்பி' என்ற படத்துக்கு பிரியங்கா சோப்ரா, இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். முதல் ஷெட்யூல் சுமூகமாக முடிந்தது. அடுத்த ஷெட்யூல் தொடங்கும் நிலையில் இரு ஹீரோயின்களுக்குள்ளும் மோதல் உருவாகி உள்ளது. பிரியங்கா சோப்ராவுக்கு மனநிலை பாதித்தவர் வேடம். இலியானாவுக்கு கிளாமர் வேடம். ஸ்கிரிப்ட் கேட்டபிறகே இருவரும் ஒப்புக்கொண்டபோதிலும் இப்போது பிரச்னை எழுந்துள்ளது.
'பிரியங்காவுக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடம் என்பதால் உன்னை எளிதில் தூக்கி சாப்பிட்டுவிடுவார்' என்று இலியானாவிடம் தோழிகள் உசுப்பி விட, அவர் முரண்டு பிடிக்க ஆரம்பித்தார். 'இதுதான் எனக்கு இந்தியில் முதல்படம். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாமலிருந்தால் எனது கேரக்டர் அடிபட்டுவிடும். எனவே கூடுதல் காட்சிகள், கூடுதல் பாடல் சீன்கள் வேண்டும்' என்று இலியானா குரல் உயர்த்தி உள்ளார். இதையறிந்த பிரியங்கா தனக்கும் கூடுதல் சீன்கள் தர வேண்டும் என்றார். இதையடுத்து ஷூட்டிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், 'ஷூட்டிங் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை' என்று இயக்குனர், தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டாலும் இரு ஹீரோயின்களுக்கும் கூடுதல் சீன்கள் உருவாக்குவதற்காக நேரம் தேவைப்படுவதால் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment