வெளிநாட்டு தொழிலதிபரை காதலிக்கிறார் குத்து திவ்யா

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வெளிநாட்டு தொழிலதிபரை காதலிக்கிறார் குத்து திவ்யா

5/17/2011 4:33:34 PM

பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குத்து திவ்யா. சமீபத்தில் காங்கிரசில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை கொல்கத்தா – பெங்களூர் அணிகள் மோதிய சிறப்பு கிரிக்கெட் போட்டி நடந்தது. இதை பார்க்க திவ்யா தனது வெளிநாட்டு காதலர் ரபேலுடன் வந்து அனைவரது பார்வையையும் ஈர்த்தார். ரபேல், போர்ச்சுகல் நாட்டில் தொழில் செய்து வருகிறார். இவரது பெற்றோர் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். கடந்த புதுவருடப்பிறப்பின் போது லிஸ்பனில் நடந்த பார்ட்டியில் முதன் முதலாக திவ்யாவும் ரபேலும் சந்தித்துள்ளனர். அப்போது இருவரின் கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆனதில் அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு ரபேலின் பெற்றோர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. Ôஆனால் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், திருமணம் செய்ய இன்னும் காலம் உள்ளதுÕ எனவும் திவ்யா கூறியுள்ளார்.

 

Post a Comment