தெலுங்குக்கு மாறினார் தமன்னா!

|

Tags: Cinema, films, focus, movie, recenty, Soruces


Tamanna
சீச்சீ இந்த மாங்காய் புளிக்கும் என்ற கதையாக தமிழில் தன்னைத் தேடி ஒரு பட வாய்ப்பும் வராததால் கடுப்பாகிப் போன தமன்னா, தமிழே வேண்டாம் என்று தெலுங்குக்குத் தாவி விட்டாராம்.

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சில காலம் கோலோச்சி வந்தவர் தமன்னா. அவருக்கு முன்னணி ஹீரோக்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அசத்தினார்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. அமலா பாலின் வரவால் தமன்னாவின் மார்க்கெட் தடுமாற்றமாகி விட்டது. அவரைத் தேடி பட வாய்ப்புகள் குறைந்து விட்டனவாம்.

இன்றைய தேதியில் தமன்னாவிடம் ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் இருக்கிறதாம். புதிய பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லையாம். இதனால் அப்செட்டாகி விட்டார் தமன்னா.

இந்த நிலையில் ஆறுதலாக வந்து சேர்ந்துள்ளது தெலுங்குப் பட வாய்ப்புகள். தெலுங்கிலிருந்து வந்த சில பட வாய்ப்புகளைப் பரிசீலித்த தமன்னா ஒரேயடியாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டு விட்டாராம்.

தமிழில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம். மறுபடியும் தெலுங்கில் நடிப்போம். மறு வாய்ப்பு வரும்போது மீண்டும் தமிழுக்கு வரலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம் தமன்னா.

English summary
Actress Tamannah is already abandoned by Tamil cinema. Till date she has one movie in Tamil. So she has shifted her focus on Telugu. Soruces say that recenty she has accepcted 4 films in Telugu.
 

Post a Comment