உண்ணாவிரதம் இருந்த வனிதா கைதாகி விடுதலை

|

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உண்ணாவிரதம் இருந்த வனிதா கைதாகி விடுதலை

5/31/2011 12:13:39 PM

முன்னாள் கணவர் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்த நடிகை வனிதா கைதாகி விடுதலை செய்யப்பட்டார். நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தாயுடன் 2 நாட்களும், தந்தை ஆகாஷுடன் 5 நாட்களும் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஸ்ரீஹரியை தன¢னிடம் ஒப்படைக்காததால் நுங்கம்பாக்கம் போலீசில் வனிதா புகார் அளித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணா விரதம் இருப்பேன் என வனிதா கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 12.15 மணி அளவில் வனிதா சாலிகிராமம் லோகையா காலனி 5வது தெருவில் உள்ள முன்னாள் கணவர் ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். பையில் வைத்திருந்த பெட்ஷீட்டை வீட்டு வாசலில் விரித்து உட்கார்ந்தார். "ஸ்ரீஹரியை ஒப்படைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்'' என்று கூச்சல் போட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "7 மாத காலமாக என் மகன் ஸ்ரீஹரியை மீட்க போராட்டம் நடத்தி வருகிறேன். ஒரு தாய் தனது மகனை மீட்க எந்தளவுக்கு போராட வேண்டி இருக்கிறது. கோர்ட் உத்தரவை ஆகாஷ் மதிக்கவில்லை. என் மகனை என்னிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றுகிறார். என் மகன் பிரச்னை இந்தளவுக்கு போவதற்கு காரணம் போலீஸ் தான்'' என்றார்.  வடபழனி உதவி கமிஷனர் நந்தகுமார், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி வனிதாவிடம் வலியுறுத்தினார். ஆனால் மறுத்து விட்டார். இதையடுத்து ஆகாஷ் வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாலை 3 மணி அளவில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்ததற்காக வனிதாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

 

Post a Comment