தலையில் தூண் விழுந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் காயம்

|

Tags: injury, minor injury, pillar, plywood, Shivaraj, summaryA, yesterday


Shivrajkumar
கன்னட திரையுலக ஜாம்பவான் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமாரின் வெள்ளி விழாவில் அவர் தலையில் அலங்காரத் தூண் விழுந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.

கன்னட திரையுலகினரால் இன்றும் பெரிதும் மதிக்கப்படுபவர் நடிகர் ராஜ்குமார். அவரது மூத்த மகன் சிவராஜ்குமார். அவர் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள காந்திநகரில் நேற்று மே தின விழா நடந்தது. அதில் சிவராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் கல்ந்து கொண்டார். இந்த விழாவில் அவருக்கு பாராட்டு நிகழ்ச்சிக்கும் சினிமாக் கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

வெள்ளிவிழா நாயகனையும், அவரது மனைவியையும் அலங்கார சாரட் வண்டியில் வைத்து ரசிகர்கள் அழைத்துச் சென்றனர். வண்டி சென்ற இரு பக்கங்களிலும் அலங்காரத் தூண்கள், வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

அவர்களை அழைத்துச் செல்கையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர், தம்பதிகள் மீது மலர் தூவி வாழ்த்தினர்.

அப்போது பிளைவுட் மரத்தால் செய்யப்பட்ட அலங்காரத் தூண் ஒன்று திடீர் என்று சிவராஜ்குமார் தலைமீது விழுந்தது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள அவருக்கு சில நிமிடங்கள் ஆனது. இந்த சம்பவம் நேற்று பகல் 12.30 மணிக்கு நடந்தது. இந்த சம்பவத்தால் சிவராஜ் குமாரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

English summary
A decorative pillar made of plywood fell on Kannada actor Shivaraj Kumar in a function held in Bangalore yesterday. He has luckily escaped with minor injury in the head.
 

Post a Comment