பார்வையாளர்களை ஈர்க்கும் 'பிரிவோம் சந்திப்போம்'!

|

Tags:


விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள பிரிவோம் சந்திப்போம் தொடர் அதிக பார்வையாளர்களை ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

தி‌ங்‌கள்‌ முதல்‌ வெ‌ள்‌ளி‌ வரை‌ இரவு‌ 7.30 முதல்‌ 8.00 மணி‌ வரை‌ ஒளி‌பரப்‌பா‌கி‌ வரும்‌ இந்தத் தொடர் ஆரம்‌பி‌த்‌து தற்‌போ‌து 25 எபி‌சோடுகள்‌ கடந்‌துள்ளன. ஆரம்‌பத்‌தி‌லே‌யே‌ பரபரப்‌போ‌டும்‌ வி‌றுவி‌றுப்‌போ‌டும்‌ உள்ளதால் வழக்‌கமா‌ன பா‌ர்‌வை‌யா‌ளர்‌கள்‌ மட்‌டும்‌ அல்‌லா‌து பு‌தி‌ய பா‌ர்‌வை‌யா‌ளர்‌களை‌யு‌ம்‌ தி‌ரும்‌பி‌‌ப்‌ பா‌ர்‌க்‌க வை‌கத்துள்ளது பிரிவோம் சந்திப்போம்.

தெ‌லுங்‌கி‌ல்‌ பல வெ‌ற்‌றி‌கரமா‌ன தொ‌டர்‌களை‌ தயா‌ரி‌த்‌த எவர்‌கி‌ரீ‌ன்‌ பு‌ரொ‌டக்‌ஷன்‌ஸ்‌ பி‌ரை‌வெ‌ட்‌ லி‌மி‌டெ‌ட்‌ சை‌யத்‌ அன்‌வர்‌ தயா‌ரி‌க்‌க, ரசூ‌ல் இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌. க்‌ளை‌ட்‌டன்‌ வசனம்‌ எழுத, மா‌ர்‌டி‌ன்‌ ஜோ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. இந்‌தத்‌ தொ‌டரி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ பெ‌ரும்‌ பகுதி‌ கா‌ரை‌க்‌குடி‌, செ‌ட்‌டி‌நா‌டு, இரா‌மே‌ஸ்‌வரம்‌ பகுதி‌களி‌ல்‌ படமா‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது.

எல்‌. ரா‌ஜா‌, ரா‌ஜலட்‌சுமி‌, கல்‌யா‌ணி‌, மகா‌லட்‌சுமி‌, ஸ்ரீதே‌வி‌, சுங்‌கரலட்‌சுமி‌, உசே‌ன்‌, சுவே‌தா‌, மற்‌றும்‌ சனா உட்‌பட பலர்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌.

சண்‌முகரா‌ஜன் ‌(எல்‌.ரா‌ஜா‌) – தனம் ( ரா‌ஜலட்‌சுமி‌)‌ தம்‌பதி‌களி‌ன்‌ மகள்‌ ஜோ‌தி.‌ தன்‌ தா‌யை‌ப்‌ போ‌ல கறுத்‌த நி‌றம்‌ உடை‌யவள்‌, அன்‌பா‌னவள்‌. சண்‌முகரா‌ஜனி‌ன்‌ தங்‌கை‌ மகள்‌ ரே‌வதி‌. வெ‌ள்‌ளை‌ நி‌றம்‌, கொ‌ள்‌ளை‌ அழகு. பெ‌ற்‌றோ‌ரை‌ இழந்‌து மா‌மன்‌ சண்‌முகரா‌ஜன்‌ வீ‌ட்‌டி‌ல்‌ வளர்‌கி‌றா‌ர்‌. ஒரே‌ வீ‌ட்‌டி‌ல்‌ இருப்‌பதா‌ல்‌ ரே‌வதி‌யு‌ம்‌ ஜோ‌தி‌யு‌ம்‌ உயி‌ருக்‌கு உயி‌ரா‌ன சகோ‌தரி‌களா‌க, தோ‌ழி‌களா‌க வா‌ழ்கி‌றா‌ர்‌கள்‌.

ஜோ‌தி‌யி‌ன்‌ கறுப்‌பு‌ நி‌றம்‌ அவள்‌ வி‌ரும்‌பு‌ம்‌ எல்‌லா‌வற்‌றை‌யு‌ம்‌ அவளி‌டம்‌ இருந்‌து பி‌ரி‌த்‌து செ‌ன்‌றுவி‌டுகி‌றது. ரே‌வதி‌யி‌ன்‌ வெ‌ள்‌ளை‌ நி‌றம்‌ அவள்‌ வி‌ரும்‌பா‌மலே‌ பல அழகி‌ய வி‌ஷயங்‌களை‌ அவளி‌டம்‌ கொ‌ண்‌டு வந்‌து சே‌ர்‌த்‌துவி‌டுகி‌றது.

ஜோ‌தி‌க்‌கு இயல்‌பா‌கவே‌ கி‌டை‌க்‌க வே‌ண்‌டி‌ய மரி‌யா‌தை‌யு‌ம்‌, அங்‌கீ‌கா‌ரமும்‌ அவள்‌ நி‌றத்‌தா‌ல்‌ அவளுக்‌கு கி‌டை‌க்‌கா‌மல்‌ போ‌குது, தன்‌ மகள்‌ ஜோ‌தி‌யை‌ நி‌னை‌த்‌து தி‌னமும்‌ அழுகி‌றா‌ள், தனம்‌‌.

அதனா‌ல்‌ ரே‌வதி‌யை‌ எப்‌படி‌யா‌வது வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு துரத்‌தி‌வி‌ட வே‌ண்‌டும்‌ என்‌று எண்‌ணி‌ பல தி‌ட்‌டங்‌களை‌ தீ‌ட்‌டுகி‌றா‌ள்‌. அவை தோ‌ற்‌றுப்‌ போ‌கி‌ன்‌றன.

இந்‌த சமயத்‌தி‌ல்‌ பெ‌ரும்‌ கோ‌டீ‌‌ஸ்‌வரி‌ அபி‌ரா‌மி‌ கண்‌ணி‌ல்‌ ரே‌வதி‌ படுகி‌றா‌ள்‌. மனநி‌லை‌ பா‌தி‌த்‌த தன்‌ மகன்‌ பி‌ரபு‌வுக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தா‌ல்‌ அவன்‌ நி‌லை‌ மா‌றும்‌ என முடி‌வெ‌டுக்‌கும்‌ அபி‌ரா‌மி,‌ ரே‌வதி‌யை‌ தன்‌ குடும்‌ப வலை‌யி‌ல்‌ சி‌க்‌க வை‌க்‌க பெ‌ரும்‌ பணத்‌தை‌ செ‌லவுசெ‌ய்‌கி‌றா‌ள்‌.

சண்‌முகரா‌ஜன்‌ மகன்‌ அருணா‌ச்‌சலம்‌, பி‌சி‌னஸ்‌ கனவோ‌டு பெ‌ரும்‌ தொ‌கை‌ கடன்‌ வா‌ங்‌கி‌ துணி‌க்‌கடை‌ ஒன்‌றை‌ ஆரம்‌பி‌க்‌க, அது ஒரு நா‌ள்‌ நள்‌ளி‌ரவி‌ல்‌ தீ‌ வி‌பத்‌துக்‌குள்‌ளா‌கி‌றது.

இதனா‌ல்‌ கடன்‌ சுமை‌, மன உளைச்‌சல்‌ ஏற்‌பட்‌டு, சண்‌முகராஜன்‌ உடல்‌ நி‌லை‌ பா‌தி‌க்‌கப்படுகி‌றது. குடும்‌பத்‌தை‌ எப்‌படி‌யா‌வது கா‌ப்‌பா‌ற்‌றும்‌ முயற்‌‌ச்‌சி‌யி‌ல்‌ இருக்‌கும்‌ ரே‌வதிக்‌கு,‌ அபி‌ரா‌மி‌ சொல்லும் 3 விதிகளுக்கு உடன்‌படுகி‌றா‌ள்‌. அந்‌த வி‌தி‌கள் என்‌ன என்‌பது இனிவரும் எபிசோடுகளில் பாரக்கலாம்.

ஒரு திரைப்படத்துக்குரிய விறுவிறுப்போடும், வேகமான காட்சி நகர்வுகளோடும் பிரிவோம் சந்திப்போம் உள்ளதால், தாய்மார்களிடம் நலல வரவேற்பு கிடைத்துள்ளது.
 

Post a Comment