5/25/2011 12:40:45 PM
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் கூறினார். எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள படம், 'ஆரண்ய காண்டம்'. இதில் ஜாக்கி ஷெராப் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது. இதையொட்டி ஜாக்கி ஷெராப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு மிகவும் பிடித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தயாரிப்பு என்பதாலும் படத்தின் கதை பிடித்திருந்ததாலும் இதில் நடிக்கிறேன். தமிழ் சினிமா தொழில்நுட்பத்திலும், கதையை கையாள்வதிலும் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நல்ல கதையும் கேரக்டரும் அமைந்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன். இந்தப் படத்தில் சென்னை தாதாவாக நடித்திருக்கிறேன். இது புதுமையான கதை. இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர் ஏன் சான்றிதழ் தர மறுத்தனர் என்பது ஆச்சரியமாக உள்ளது.
இந்திப் படங்களில் அதிக வாய்ப்பு இல்லாதால்தான் பிற மொழி படங்களில் நடிப்பதாக கூறுவது தவறு. 170 படங்களில் சோலோ ஹீரோவாக நடித்திருக்கிறேன். 100 இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். நான் நடித்த படங்களில் சிலவற்றை தவிர மற்ற அனைத்தும் வெற்றிப் படங்கள். இதற்குமேல் என்ன சாதனை செய்ய வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, நடிகர் சம்பத், நடிகை யாஸ்மின் உடனிருந்தனர்.
Post a Comment