சிம்புவுடன் இணைகிறார் மிஷ்கின்?

|

Tags:



விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் வானம் படங்களுக்குப் பிறகு, தனக்கேற்ற இயக்குநர் யார் என்று பார்க்காமல், தன்னை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் இயக்குநர்களாகப் பார்த்து கால்ஷீட் கொடுக்கிறார் சிம்பு.

தனது அடுத்த படமான ஒஸ்தியில் அதிரடி இயக்குநர் தரணியுடன் இணைந்த சிம்பு, அடுத்த படத்தை மிஷ்கினுக்கு கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தப் படத்தை பிஎல் தேனப்பன் தயாரிக்கிறார். ஏற்கெனவே சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் படத்தைத் தயாரித்தவர் தேனப்பன்தான்.

சமீபத்தில் தேனப்பன் ஏற்பாட்டின்படி சிம்புவும் மிஷ்கினும் சந்தித்துப் பேசினர். அடுத்த படத்துக்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பிக்க சிம்பு ஒப்புக் கொண்டுள்ளார். இரண்டு கதைகளை விவாதித்துள்ளனர். கதை முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment