இந்தப் படத்தை கரு.பழனியப்பனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சாப்ளின் இயக்குகிறார். கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரணிதா.
படம் குறித்து இயக்குநர் சாப்ளின் கூறுகையில், “பொதுவாக ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஹீரோ காதல் கொள்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் பார்த்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறார். அதுவே அவர்களை காதல் வயப்படுத்துகிறது. இந்த காதலுக்கு ரவுடிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அது ஏன் என்பதுதான் கதை.
என் முதல் படம் இது. இப்படத்துக்காக முதலில் ஹீரோயின் தேடி அலைந்தேன். ஹீரோயின் வேடம் படத்தின் கதைக்கு முக்கியமானது என்பதால், நிறைய பேரைத் தேர்வு செய்து பார்த்தேன். பலர் செயற்கைத்தனமாக நடிப்பை வெளிப்படுத்தினார்கள்.
பிரணிதாவிடம் அழகும், நடிப்புத் திறமையும் சேர்ந்திருந்ததால், அவரை இப்படத்துக்கு தேர்வு செய்து விட்டேன். தெலுங்கில் ‘பாவா’, கன்னட ‘போக்கிரி’யில் நடித்துள்ளார்.
அருள்நிதி ஏற்கெனவே வம்சம் படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஜெயித்தவர். இந்தப் படம் அவருக்கு இன்னொரு திருப்பு முனையாக அமையும்,” என்றார்.
Post a Comment