5/31/2011 12:14:37 PM
பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு, எர்ணாகுளம் குடும்பநல நீதிமன்றம் நேற்று விவாகரத்து வழங்கியது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான காவ்யா மாதவனுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த நிஷால்சந்திரா என்பவருக்கும், கடந்த 2009ம் ஆண்டு கொல்லூர் மூகாம்பிகா கோயிலில் திருமணம் நடந்தது. நிஷால்சந்திரா, குவைத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பின்னர், காவ்யா மாதவன் கணவருடன் குவைத்திற்கு சென்றார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணம் முடிந்த 5வது மாதத்தில் கணவரை பிரிந்த காவ்யா மாதவன், கேரளாவுக்கு திரும்பினார். அதன் பின்னர், அவர் குவைத் செல்லவில்லை. இதன்பின், காவ்யா மாதவன் கடந்த ஆண்டில் எர்ணாகுளம் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் காவ்யா மாதவனுக்கு விவாகரத்து வழங்கி நேற்று தீர்ப்பளித்தது.
Post a Comment