கரிகாலன் படத்தில் ஹாலிவுட் நாயகியுடன் ஜோடி சேரும் விக்ரம்!

|

Tags:



விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு கரிகாலன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சில்வர்லைன் பிலிம் பேக்ட்ரி தாயாரிப்பில் எல் .ஐ கண்ணன் இயக்கும் இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஜரைன் நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே இந்தியில் வீர் படத்தில் நடித்துள்ளார்.

கரிகாலன் என்கிற மன்னனின் வாழ்க்கையை புனைவுக் கதையாக பதிவு செய்யும் வரலாற்றுத் திரைப்படம் கரிகாலன்.

இந்த பிரமாண்டமான திரைப்படம் அனிமேட்ரானிக்ஸ், மினியேச்சர், கிராபிக்ஸ் என முதல் தர தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகிறது. இதற்காக பலநாட்டு நவீன தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்தப் படத்தில் இணைகிறார்கள்.

ஜீவா நடித்து வெளியான “சிங்கம்புலி” டத்தின் தயாரிப்பாளர்கள் பார்த்தி, எஸ்எஸ் வாசன் இணைந்து தயாரிக்கும் கரிகாலனின் முதல்கட்ட படப்பிடிப்பு தலைக்கோணம் காட்டுப்பகுதியில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் படக்குழு மும்முரமாக உள்ளது.

படத்தின் இயக்குநர் கண்ணனுக்கு இது முதல்படசம். குறைந்தது மூன்று படங்களாவது இயக்கியவர்களுடன்தான் பணியாற்றுவேன் என்று முன்பு கண்டிஷன் போட்டவர் விக்ரம். ஆனால் எந்திரன், ஈரம், கஜினி, அருந்ததி போன்ற படங்களில் விஷுவல் எபெக்ட்ஸ் நிபுணராகப் பணியாற்றிய கண்ணனுக்கு முதல் படத்திலேயே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். பசுபதி சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே படத்தில் உண்டு.

 

Post a Comment