'நான் ரிடையர் ஆகல... !'- லதா மங்கேஷ்கர்

|

Tags:


மும்பை- நான் சினிமாவில் பாடவதிலிருந்த ரிடையர் ஆகிவிட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை. நான் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறேன்... பாடுவேன், என்கிறார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.

81 வயதாகும் லதா மங்கேஷ்கர், திரை இசையில் ஒரு வாழும் சகாப்தமாகத் திகழ்பவர். பல தலைமுறைகள் தாண்டி இன்று வரை பாடிக் கொண்டிருப்பவர்.

இவர் பாடுவதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக பிரபல பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டது. உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் லதா.

"நான் பாடுவதை நிறுத்திவிட்டதாக டிஎன்ஏ என்ற செய்தித் தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தவறான தகவல். இவ்வளவு பிரபல பத்திரிகை பொய்யான தகவலை வெளியிடலாமா... குறைந்தபட்சம் என்னை கேட்டாவது எழுதக் கூடாதா?

நான் ரிடயராவதை நான்தான் அறிவிக்க முடியும். மற்றவர்கள் சொல்லக் கூடாது.

நான் எனது கடைசி மூச்சுவரை பாடிக் கொண்டுதான் இருப்பேன். நான் பாடுவதை நிறுத்திவிட்டதாகக் கூறுவது என்னை அவமானப்படுத்துவதற்கு சமம். இதைச் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை," என்றார்.

பாரத் ரத்னா விருது பெற்றுள்ள லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில் 70 ஆண்டுகளாகப் பாடி வருகிறார்.
 

Post a Comment