கலக்க வரும் சுஷ்மிதா சென் சிஷ்யை!

|

Tags:


சுஷ்மிதா சென்னை தனது மானசீக குருவாக வசீகரித்துள்ள ஷீனா சோஹன் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

2010ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியாக தேர்வானவர் ஷீனா. அப்போது ஷீனாவைத் தேர்வு செய்தவர் சுஷ்மிதா. இதனால் சுஷ்மீதா மீது ஷீனாவுக்கு அதிக பாசம் ஏற்பட்டு விட்டது. சுஷ்மிதாவை தனது குருவாகவே வசீகரித்துக் கொண்டார் ஷீனா. இன்று அவரும் சுஷ்மிதா பாணியில் ஹீரோயினாகியுள்ளார்.

சுஷ்மிதா தமிழ்ப் படம் மூலமாக ஹீரோயினானார். ஆனால் ஷீனா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் ஷீனா. படத்தின் பெயர் தி டிரெயின். ஜெயராஜ் படத்தை இயக்குகிறார்.

ஷீனாவுக்கு கவர்ச்சிகரமான, குத்துப் பாடல்களின் நாயகியாக உலா வர விருப்பம் இல்லையாம். நல்ல நடிகையாக தான் அறியப்பட வேண்டும் என்கிறார் ஷீனா. இவருக்குப் பிடித்த நடிகைகள் மாதுரிதீட்சித், ஸ்ரீதேவி, ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ரசிகர்களை எனது நடிப்புதான் கவர வேண்டும். எனது உடலோ அல்லது கவர்ச்சியோ கவரக் கூடாது. எனவேதான் நான் நடிப்பில் அதிக கவனம்செலுத்துகிறேன். கவர்ச்சிக்கு நான் எப்போதும் ரெட்தான் என்கிறார் ஷீனா.

பார்ப்போம், ஷீனாவின் லட்சியம் வெல்லுமா அல்லது அவரை கவர்ச்சி அலை மூழ்கடிக்குமா என்பதை!
 

Post a Comment