ரஜினி நலம் பெற சோனியா காந்தி வாழ்த்து!

|

Tags:


சென்னை : ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், விரைவில் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பூங்கொத்து அனுப்பி வைத்துள்ளார்.

இத்தகவலை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

சோனியா காந்தியின் வாழ்த்துக்காக அவருக்கு ரஜினிகாந்தின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளதாகவும் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

இதற்கிடையே ரஜினி நலம் பெற, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அவரை நேரில் சந்திக்க முயன்று வருகின்றனர். பலர் மருத்துவமனைக்குச் சென்று லதா ரஜினிகாந்திடம் பூச்செண்டு கொடுத்து திரும்புகிறார்கள்.
 

Post a Comment