5/20/2011 11:40:34 AM
நடிகர் விவேக் கூறியதாவது: சன் பிக்சர்ஸின் 'எந்திரன்', 'ஆடுகளம்' படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது பெருமையான விஷயம். 'ஆடுகளம்' 6 விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இதில் நடித்த தனுஷ், அப்படியே மதுரை இளைஞனாக மாறியிருந்தார். மதுரை மண்ணின் வாழ்க்கையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கினார். அதற்கான பரிசுதான் இந்த தேசிய விருது. ஆடுகளம் ஆர்ட் பிலிம் போல தோன்றும் கமர்ஷியல் படம். இந்த கதையை படமாக்குவது பெரிய ரிஸ்க். நிறைய துணிச்சல் வேண்டும்.
ஆடுகளம் அப்படி என்றால் 'எந்திரன்' அப்படியே தலைகீழ். அந்த பிரமாண்டம் இந்தியாவே இதுவரை பார்க்காதது. இத்தனை கோடிகளை கொட்டி படமெடுக்க மகா துணிச்சல் வேண்டும்.
இப்படி முற்றிலும் வெவ்வேறான கதைக்களத்தை சேர்ந்த இரண்டு படங்களையும் கொடுத்து தமிழுக்கு 8 தேசிய விருதுகள் கிடைக்க காரணமான கலாநிதி மாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்திரனுக்காக ரொம்பவும் உழைத்த ரஜினிக்கும் ஒரு விருது கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
Post a Comment