சிகாகோ: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ராணா, இந்தியில் இயக்குநர் மகேஷ் பட்டுடன் சேர்ந்து திரைப்படம் தயாரிக்க விரும்பியதாக மற்றொரு குற்றவாளியான டேவிட் ஹேட்லி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
சிகாகோ நீதிமன்றத்தில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, ராணாவின் வழக்கறிஞர் பேட்ரிக் ப்ளேகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
தனது படத்தில் பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் மகன் ராகுல் பட்டுடன் இணைந்து பணியாற்ற ராணா விரும்பினார் என்றும் ஹேட்லி கூறியுள்ளார். மகேஷ் பட் உதவாததால் தன்னால் சினிமாவில் பிரகாசிக்க முடியவில்லை என ராகுல் பட் கூறினாராம். எனவே பாகிஸ்தானின் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் பின்னணியில் ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால், அவரால் தனது திரைப்படக் கனவை நிறைவேற்ற முடியவில்லை. சினிமாவில் ஈடுபடுவது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் ராணாவின் ஆசை நிறைவேறவில்லை என்றும் ஹேட்லி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment