கிம் கர்தஷியான்-கிரிஸ் ஹம்ப்ரீஸ் நிச்சயதார்த்தம் முடிந்தது!

|

Tags:

வாழ்க்கையில் 'செட்டிலாகிறார்' கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியான். அவருக்கும், அமெரிக்காவின் நியூஜெர்சி கூடைப்பந்து வீரர் கிரிஸ் ஹம்ப்ரீஸுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இருவரும் சில காலமாக காதலித்து வந்தனர். இதுகுறித்து கிசுகிசுக்கள் பிய்த்துக் கொண்டு வெளியாகின. இருந்தாலும் தங்களது காதலை இருவரும் கமுக்கமாக வைத்திருந்தனர். இப்போது நிச்சயதார்த்த்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

கவர்ச்சி வெடிகுண்டான கிம்முக்கும், நியூஜெர்சி கூடைப்பந்து வீரர் ஹம்ப்ரீஸுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கிம்மிடம் பீப்பிள் பத்திரிக்கை கருத்து கேட்டபோது இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார். கிம்மும், கிரிஸும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். மே 18ம் தேதியன்று என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா கிம் என்று கிரிஸ் கேட்டாராம். சந்தோஷித்துப் போன கிம் உடனே ஓ.கே சொல்லி விட்டார். இதையடுத்து நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம். இப்போது கிம் கை விரலில் கிரிஸ் மாட்டிய நிச்சயதார்த்த மோதிரம் பளிச்சென பிரகாசிக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் கிம்முக்கு வயசு 30, கிரிஸுக்கு வயசு 26.

கல்யாணம் செய்து கொள்வது குறித்து கிரிஸ் கூறியது குறித்து கிம் தொடர்ந்து கூறுகையில், அவர் அப்படிக் கேட்டதும் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அதை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. எனது வீட்டின் படுக்கை அறையை ரோஜா பூக்களால் நிரப்பி வைத்திருந்தார் கிம். எனக்கு அந்த சூழலே மிக மிக ரம்மியாக இருந்தது. எனது வீட்டிலேயே வைத்து என்னைக் கல்யாணம் செய்து கொள்வது குறித்து அப்படி ஒரு அலங்காரத்துடன் அவர் கேட்டது என்னைக் கவர்ந்து விட்டது என்றார் கிம் குதூகலத்துடன்.

அப்புறம் என்ன இனி ஜம்மென்று வாழ்க்கை வண்டியை செலுத்த வேண்டியதுதானே...!
 

Post a Comment