5/16/2011 10:53:37 AM
தமிழ், தெலுங்கு சினிமா துறையை ஒப்பிடும்போது, இந்தி ரசிகர்கள் நிலையானவர்கள் இல்லை என்றார் சமீரா ரெட்டி. இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மூன்றையும் ஒப்பிட்டால் ரசிகர்கள்தான் மாறுபடுகிறார்கள். தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நிலையானவர்கள். ஒரு முறை அவர்களுக்குப் பிடித்துவிட்டால் எப்போதும் கொண்டாடுவார்கள். இந்தி ரசிகர்கள் இன்று ரசிப்பார்கள், நாளை மறந்துவிடுவார்கள். நிலையான ரசிகர்கள் என்பது இல்லை. தென்னிந்திய நடிகைகள் இந்திக்கு செல்வது நல்ல விஷயம்தான். தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அவர்கள் கொஞ்சம் போராட வேண்டியிருக்கும். ஏனென்றால், 'அவர் தென்னிந்திய நடிகை' என்ற மனநிலை பாலிவுட்டில் இன்னும் இருக்கிறது. தமிழில் பிரபுதேவா இயக்கும் படத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறேன். அடுத்து சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எப்போது திருமணம் என்கிறார்கள். எனக்கு அதற்கு நேரமில்லை. இன்னும் யாரையும் காதலிக்கவில்லை. நடிப்பில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு நடிப்பைதான் காதலித்து வருகிறேன்.
இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
Post a Comment