5/16/2011 5:27:13 PM
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் கூறினார். கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரூவார சிகிச்சை முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார்.
மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே கடந்த 4-ம் தேதி அவர் மீண்டும் சிகிச்சைக்காக இசபெல் மருத்துவமனைக்குப் போனார். ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீடு திரும்பியவர் சில தினங்கள் ஓய்வெடுத்தார். ஆனால் கடந்த 13-ந் தேதி ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு வந்த ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் ரசிகர்கள் மற்றும் மீடியாவிடம் பேசினார். ரஜினி நலமுடன் உள்ளார் என்றும் அவருக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Post a Comment