சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினிக்கு டயாலிசிஸ்

|

Tags:


சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.

அவருக்கான சிகிச்சை முறைகள் குறித்து ரஜினியுடன் சென்றுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், எலிசபெத் மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை காலை சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டார் ரஜினிகாந்த். அவர் சிங்கப்பூர் சிறுநீரக கழக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அவர் ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ரஜினிக்கு மீண்டும் டயாலிசிஸ் தரப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகள் தொடங்கியுள்ளன. அவருக்கு மேற்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ரஜினிகாந்த் சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதும் சிங்கப்பூரில் வசிக்கும் ரஜினியின் ரசிகர்கள் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று, ரஜினிக்கான சிகிச்சைகள் குறித்த விவரங்களை மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை வெளியிடவில்லை.
 

Post a Comment