திமுக ஆட்சியில் அட்ரா அட்ரா என்று கருணாநிதிக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த சிரிப்பு நடிகர் விவேக், மாறி வீசும் காற்று காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தி கூறி வாய் நிறைந்த சிரிப்புடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
திமுக ஆட்சியின்போது விவேக் அடித்த ஜால்ராவைப் போல வேறு யாருமே அடித்திருக்க முடியாது. குறிப்பாக கருணாநிதிக்கு திரையுலகினர் ஒன்று கூடி நடத்திய பாராட்டு விழாக்களில் அவர் கருணாநிதியை அப்படிப் புகழ்ந்தார். ஜெயலலிதாவை கிண்டலடிக்கவும் அவர் தவறியதில்லை.
மேலும், பத்திரிக்கையாளர்களை, திரையுலகினர் கூட்டம் நடத்தி குண்டக்க மண்டக்க பேசியபோதும், கருணாநிதி அரசு இருந்த தைரியத்தில் வாய் வலிக்கும் அளவுக்கு தாறுமாறாக அசிங்கமாகப் பேசியவரும் விவேக்.
அப்படிப்பட்ட விவேக் இப்போது காற்று திசை மாறி வீசத் தொடங்கியிருப்பதால் அவரும் பாதை மாறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ளதற்காக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
விஜயகாந்த் கஷ்டப்பட்டு அரசியல் நடத்தியபோதெல்லாம் அவர் இருக்கும் திசையில் தலை வைத்துக் கூடப் படுக்காதவர் இந்த விவேக். ஆனால் இன்று முக்கியப் பொறுப்பில் விஜயகாந்த் நுழைந்துள்ள நிலையில் ஐஸ் வைக்கும் வகையில் அவரைப் பார்த்து பொன்னாடை போர்த்தியுள்ளார் விவேக்.

Post a Comment