உதவி இயக்குனர்களை நடிகராக்கிய டைரக்டர்!

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உதவி இயக்குனர்களை நடிகராக்கிய டைரக்டர்!

5/17/2011 12:59:18 PM

'மைதானம்' பட இயக்குனர் எம்.எஸ்.சக்திவேல் கூறியதாவது: 4 நண்பர்கள் கதை என்றால் குட்டிச் சுவர் மீது அமர்ந்து அரட்டையடிக்கும் கதைகள்தான் வந்திருக்கிறது. நடைமுறையில் அது சாத்தியமில்லை. இது 4 நண்பர்கள் கதைதான். சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சுரேஷ்குரு, ஜோதிராஜ், சிவா, கென்னடி ஆகிய 4 உதவி இயக்குனர்கள் நண்பர்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு மேக்அப் போடவில்லை. ஹீரோயின் சுவாதிகாவுக்கும் மேக்அப் கிடையாது. உதவி இயக்குனர்களை நடிகர்களாக்கியதற்கு காரணம் இருக்கிறது. புதுமுகங்களை தேர்வு செய்து நடிக்க வைப்பது சிரமம். உதவி இயக்குனர்களுக்கு ஓரளவுக்கு நடிக்க தெரியும். அதனால் அவர்களை தேர்வு செய்தேன். கதையில் காதல் இருக்கிறது. அதுவும் யதார்த்தமாக இருக்கும். தஞ்சாவூர் அருகே நடந்த உண்மை சம்பவமே இக்கதை.

 

Post a Comment