'முழுகாமல்' இருக்கிறார் ஷில்பா ஷெட்டி!

|

Tags:


நடிகை ஷில்பா ஷெட்டி கர்ப்பமாக இருக்கிறாராம். இதனால் அவரும், கணவர் ராஜ் குந்த்ராவும் படு சந்தோஷமாகியுள்ளனர்.

நடிகையாக ஷில்பாவின் கிராக்கி மங்கிப் போய் வெகு காலமாகி விட்டது. இப்போது அவர் தனது காதல் கணவருடன் லண்டனில் குடித்தனம் செய்து வருகிறார். கூடவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் புதிய சந்தோஷமாக கர்ப்பமாகியிருக்கிறார் ஷில்பா. 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணமானது. தற்போது இவர்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு குட்டிப் பாப்பா வரவுள்ளது.

ஷில்பாவுக்கு இது முதல் குழந்தையாகும். அதேசமயம், ராஜ் குந்த்ராவுக்கு இது 2வது குழந்தையாகும். ராஜ் குந்த்ராவின் முதல் மனைவி கவிதா. இவர்களுக்கு டலீனா என்ற பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு இப்போது 6 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குழந்தைச் செல்வம் குறித்து ஷில்பா அளித்திருந்த ஒரு பேட்டியில், எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். குழந்தைப் பேறுக்காக காத்திருக்கிறேன். குறைந்தது 2 குழந்தைகளாவது பெற்றுக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக தாயாகியிருக்கிறார் ஷில்பா.

ஷில்பாவுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்திற்காக தனது மனைவி கவிதாவை உதறித் தள்ளினார் குந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment