இத்தனை நாட்கள் எங்கே இருந்தார், என்ன செய்தார்…. இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் போகாமல், நேரே விஷயத்துக்கு வருவோம்…. மனிதர் இப்போது சினிமா ஹீரோவாகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் என்பதுதான் இப்போது அவர் முழுப் பெயர். நடிக்கும் படத்துக்குத் ‘தலைவன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
தலைவன்?
“ஆமாங்க… படம் பேரு தலைவன்தான். நம்ம புரட்சித் தலைவரோட படம் ஒன்றின் பெயரே எனது முதல் படத்தின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. அதுதான் தலைவர் எனக்குத் தரும் ஆசீர்வாதம்”, என்கிறார் உற்சாகத்துக்குக் குறைவில்லாத பாஸ்கரன்.
படத்தின் இயக்குநர் ரொம்பப் பிரபலமானவராம். ஆனால் பெயரை இப்போது அறிவிக்க மாட்டார்களாம்.
சரி, திமுக தலைவர்களின் வாரிசுகள் நடிக்க வந்தால் மட்டும் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டார்களே… இப்போது பாஸ்கரன் நடிக்க வந்தது மட்டும் எந்த வகையில் சேர்த்தி? என்று கேட்டால், “என் திறமை மூலம் மட்டுமே நான் ஜெயிப்பேன். தயாரிப்பாளரில் இருந்து லைட்பாய் வரை எல்லாரும் வாழணும். நான் வாழறதுக்காக மத்தவங்க வாழ்க்கையை அழிக்க மாட்டேன் என்கிறார்!
பாஸ்கரனுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி உண்டா என்றால், “அவர் ஆசி இல்லாமலா… அது எப்பவும் நிறைய உண்டு”, என்று கூறியுள்ளார் ஒரு பேட்டியில்!
1995ம் ஆண்டு அன்னிய செலாவணி விவகாரத்தில் இவரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்ததும் நினைவுகூறத்தக்கது. ரிம்சாட் என்ற செயற்கைக் கோள் நிறுவனத்துக்கு 6.8 லட்சம் டாலர் பணத்தை இவர் பறிமாற்றம் செய்ததாக அப்போது புகார் கூறியது அமலாக்கப் பிரிவு.
பின்னர் அந்த வம்பு வழக்குகளில் இருந்தெல்லாம் வெளியே வந்து மிக மிக அமைதியாக இருந்தார். இப்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
Post a Comment