சென்னையில் நடந்த சினிமாப் படப்பிடிப்பின்போது தவறி கீழே விழுந்ததில் பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தெலுங்கில் பிரபலமான நாயகர்களில் ஒருவர் டாக்டர் ராஜசேகர். ஆரம்பத்தில் தமிழில் நடித்து வந்தார். பின்னர் தெலுங்கில் முக்கிய நடிகராக மாறினார். அதிரடிப் படங்களுக்குப் பெயர் போனவர். இதுதாண்டா போலீஸ் உள்ளிட்ட பல அதிரடிப் படங்களில் நடித்தவர்.
இவரது மனைவி நடிகை ஜீவிதா. இவர் தற்போது தனது கணவரை ஹீரோவாகப் போட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இன்று ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினர். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து விட்டார் ராஜசேகர். அதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Post a Comment