5/18/2011 3:19:32 PM
பிரபலமான ஹீரோயின்கள் படங்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக நெட்டில் உலவவிடுவதை கண்டிக்கிறார் ஸ்ரேயா. அவர் கூறியது: தமிழில் 'ரவுத்திரம்' படம் வரவுள்ளது. இந்தியில் தீபா மேத்தாவின் 'மிட்நைட்ஸ் சில்ரன்' ஷூட்டிங்கில் பங்கேற்றேன். இந்நிலையில் சில நடிகைகளின் படங்கள், ஆபாசமாக போஸ் தருவது போல் நெட்டில் பரப்புவதாக அறிந்தேன். இதைவிட கொடுமை என்னவென்றால், அந்த படங்களை விற்கிறார்கள். இத்தகைய போலி படங்களால் அந்த நடிகைகள் எப்படி மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தர்மசங்கடமான அந்த சூழலில் நானும் சிக்கி இருக்கிறேன். நெட்டில் எனது போலி படங்களை தேடிப்பிடித்து, அதை நிறுத்த நடவடிக்கை எடுத்தேன். இந்த சம்பவம் நடந்த பிறகு நான் எச்சரிக்கையாக இருக்கிறேன். பேஸ்புக், ட்விட்டரில் என்னை தொடர்பு கொள்பவர்கள் எனது படங்களை கேட்பதுண்டு. அவர்களுக்கு உடனடியாக எனது படங்களை அனுப்புவது கிடையாது. அப்படி கேட்பவர்கள் உண்மையில் நண்பர்கள்தானா என்பதை ஆராய்ந்த பிறகே அனுப்புவேன்.
Post a Comment